திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (09:34 IST)

ஊரடங்கிற்கு முன் வாங்கிய ரூ.1000 பாஸ் செல்லுமா: போக்குவரத்து அமைச்சர் தகவல்!

ஊரடங்கிற்கு முன் பேருந்து பயணிகள் வாங்கிய ஆயிரம் ரூபாய் பாஸ் செல்லும் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ரூபாய் 1000 பாஸ் வாங்கியவர்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது
 
இந்த நிலையில் தற்போது இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளதை அடுத்து ஏற்கனவே வாங்கிய ஆயிரம் ரூபாய் பாஸ் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் 
 
இந்த கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் ஊரடங்கிற்கு முன் வாங்கிய ஆயிரம் ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என்றும் அந்தப் பாஸை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த குழப்பத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.