புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 5 பிப்ரவரி 2015 (13:15 IST)

பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியான தென்னரசு வெட்டிக் கொலை

பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
 
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு. இவர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்ககள் உள்ளன. இவர் பிரபல ரவுடியான வெள்ளை ரவியின் கூட்டாளியாவர்.
 
இந்நிலையில், தென்னரசுவின் நண்பர் ஒருவரது திருமணம் வெங்கல் தாமரைப் பாக்கம் கூட்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. 
 
இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தென்னரசு இன்று(05.02.2015) காலையில் காரில் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அங்கு அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றப்பின்னர் வீடு திரும்புவதற்காக தனது காரில் ஏறுவற்கு மண்டபத்தின் வாசலுக்கு வந்தார்.
 
எதிர்பாராத விதமாக, அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திருமண மண்டபத்தின் வாசலில் தென்னரசுவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் மோட்டார் சைக்கிளிலேயே அவர்கன் தப்பி சென்று விட்டனர்.
 
சரமாரரியாக வெட்டுபடட தென்னரசு ரத்த வெள்ளத்தில், திருமண மண்டபத்தின் வாசலிலேயே சருண்டு விழுந்து உயிரிழந்தார். பிரபல ரவுடி தென்னரசு வெட்டி கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த படுகொலை சம்பவத்தைத தொடர்ந்து, வெங்கல் பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுதக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.