1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:42 IST)

Chennai Traffic Alert: சோதனை முறையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை நந்தனம் சிக்னல் அருகே அடுத்த 10 நாட்களுக்கு சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
இந்த போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை விரிவாக தெரிவித்துள்ளதாவது...
 
சென்னை நந்தனம் சிக்னலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 29.04.2022 (நாளை) முதல் அடுத்த 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.
 
1. வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் யூ டர்ன் திரும்பலாம்.
 
2. செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்ல அண்ணாசாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன் யூ டர்ன் செய்ய வேண்டும்.  
 
3. பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்ல, அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டோயாட்டோவுக்கு முன்னால் யூ டர்ன் போடனும்.