வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (13:38 IST)

ஆயா ஒரு அப்பாவி ; சிறுமியை அடித்தது சரிதான் ; ஆர்.ஜே. தீனா (வீடியோ)

மலேசியாவில் 6 வயது சிறுமியை அவரின் பாட்டி பிரம்பால் அடித்த அதிர்ச்சி வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.


 
 
சாப்பிடும் உணவை கீழே கொட்டியதால், பேத்தியை தாக்கியதாக அந்த பாட்டி தெரிவித்திருந்தார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், பிரபல ரேடியோ மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரான தீனா, அந்த பாட்டி செய்தது சரிதான் என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அதாவது, அந்த பாட்டி தனது பேத்தியிடம் விளையாட்டுதான் காட்டினேன் என கூறியுள்ளார். அதை வைத்து கிண்டலடித்து பேசியுள்ள தீனா, ஆயா ஒரு அப்பாவி.. நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள்.. ஆயா காட்டிய அதே விளையாட்டை போலீசார் அவரிடம் காட்டுவார்கள் என ஏகத்துக்கும் கிண்டலடித்துள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...