புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 ஜூன் 2022 (09:01 IST)

பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

polytechnic
பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் படிப்படியாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது
 
1.40 லட்சம் இடங்களில் 30% மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மூட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்பதே பாலிடெக்னிக் கல்லூரிகளின் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.