திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (19:23 IST)

புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டம் நீக்கம்? வலுக்கும் எதிர்ப்பு

Christopher Luxon
புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்கவுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளதால்  இதற்கு எதிர்ப்பு குவிந்துள்ளது.
 
நியூசிலாந்து நாட்டில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்,  கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை வென்றது. அதன்பின்னர்  2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
 
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் லக்சன் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.
 
அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை  உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிகரெட்டில் கூறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு,  இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்டவற்றை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 
முந்தையை அரசு புகைப்பிடித்தலுக்கு தடைவிதித்ததை  சுகாதார  நிபுணர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.