ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (18:28 IST)

20ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும்- பதிவுத்துறை தலைவர்

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கபட்டுள்ளது. இந்நிலையில், 20ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை மட்டுமே பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது எனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.