புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (15:34 IST)

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை நேரம் குறைப்பு

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தெதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என அமைச்சர் அன்பில்  மகேஷ் தெரிவித்திருந்தார்.

இ ந் நிலையில் இன்று தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிக்க உயர் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 11  மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறை நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.