வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (11:56 IST)

எவ்வளவு திட்டினாலும் ’அதை கடைப்பிடித்தால்’ பிரச்சனையும் வராது - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

RB Udayakumar says that if you follow the code, you will not have a problem

சுங்கச் சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகள்  பேசுவதை கேட்டுக் கொண்டு நிதானத்தைக் கடைபிடித்தால் பிரச்சனை வராது என தெரிவித்துள்ளார்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது.
 
திருமங்கலம் கப்பலூர் சுங்கச் சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனையால் எனது வாக்குகள் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
 
மேலும்,மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் மனதில் வைத்து மக்களிடம் வாக்குகள் கேட்பதுபோல் சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.தெரிவித்துள்ளார்.