வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (17:25 IST)

ரஞ்சித், தினகரன் கட்சியில் இணைந்ததன் பின்னணி..?

அதிமுக - பாமக கூட்டணி குறித்து பல கடுமையான விமர்சங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, பாமக இளைஞர் அணி தலைவர் விலகியுள்ள நிலையில் தற்போது அந்த கட்சியின் மாநில துணைத் தலைவரும் நடிகருமான ரஞ்சித் பாமகவில் இருந்து நேற்று  விலகினார். இந்நிலையில் தற்போது அவர் டிடிவி. தினகரனின் அமமுக கட்சியில் இணைந்துள்ளதால் அரசியலில் மேலும் பரபரப்பு கூட்டியுள்ளது.
இன்று புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் டிடிவி தினகரன் முன்னிலையில் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார்.
 
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித் மாற்றம் முன்னேற்றம் என்று கூறித்தான் பல்ரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களின் தன்மானத்தை கூட்டணிக்காக விற்றுவிட்டனர். 
 
இன்னும் நிறைய பேர் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள்.தமிழக மக்களின் நலனுக்காகத்தான் நான் அம்முகவில் இணைந்துள்ளேன். வரும் தேர்தலில் அமமுகவினர் தேர்தலில் வெற்றிபெற தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளேன். என்றார்.
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அத்துனை கட்சிகளும் கடந்த ஆர்.கே,நகர் இடைத்தேர்தலில் சரமாரியாக வீடு வீட்டுக்கு டோக்கன் வழங்கி ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் தான் ஏற்கனவே இருந்த பாமக, அதிமுகவுடன்  கூட்டணி வைத்ததால் விரக்தி அடைந்த ரஞ்சித் அக்கட்சியிலிருந்து விலகினார். 
 
இந்நிலையில் பல கட்சியினர் விமர்சிக்கும் தினகரன் கட்சியில் எந்த மாற்றத்தை  மனதில் வைத்து ரஞ்சித்  இணைந்தாரோ...? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.