70 வயது ஆகுதே தெம்பு வேணாவா பா.. ரஜினி குறித்து பாண்டே சர்ச்சை!
ரஜினியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது ரங்காராஜ் பாண்டே பேசியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் பிறந்தநாள் விரைவில் வர உள்ளதால் இப்போது முதலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி பிறந்தநாள் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரின் சார்பில் கொண்டாடப்பட்டது. கொண்டாத்தை தவிர நலதிட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
அப்போது ரங்கராஜ் பாண்டே, அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய திமுக, ஆட்சியில் உள்ள அதிமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் ரஜினிக்கு தரவேண்டும். ரஜினிக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும் என பேசினார்.
இவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எங்க தலைவர் இன்னும் சுறுசுறுப்பா இருக்காரு, அரசியலில் தீவிரமா செயல்படுவாரு என முனுமுனுத்து வருகின்றனர்.