திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (12:07 IST)

உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடும் நன்னாள்.. இந்நாள்! – ராமதாஸ் தைப்பூச வாழ்த்து!

தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்பான தைப்பூச நாளான இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் கடவுள் முருகனுக்கு சிறப்பான நாளான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் முருகன் கோவில்களில் பலத்த பக்தர்கள் கூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் தைப்பூசத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் “தமிழர் கடவுள் முருகனை போற்றி தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தமிழீழம், தென்ஆப்பிரிக்கா என உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடும் பண்பாட்டு திருவிழா தைப்பூசம். இந்த நன்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என ட்விட்டர் மூலமாக வாழ்த்தியுள்ளார்.