திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (11:42 IST)

எல்லாருக்கும் இடஒதுக்கீடு பெறுவதுதான் எனது இலக்கு! – ராமதாஸ் விளக்கம்!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கு 10.5% இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றிய நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து நன்றி தெரிவித்து பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.

மேலும் “வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்!” என தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் மற்ற பிரிவினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடை பெற்று தர முயல்வதாகவும் கூறியுள்ளார்.