திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (13:11 IST)

ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்! – போயஸ்கார்டனில் குவிந்த ரசிகர்கள்!

புத்தாண்டான இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வந்த அவரது ரசிகர்களை அவர் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் ஒமிக்ரான் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புத்தாண்டை முன்னிட்டு கடற்கரைகளுக்கு செல்வது, பொது இடங்களில் கொண்டாடுவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் எளிமையாக வீடுகளில் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் இன்று புத்தாண்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் பலர் அவரது வீடு முன்பாக குவிந்துள்ளனர். அவர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரை கண்டதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பியும், ஹேப்பி நியூ இயர் தலைவா என்று சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.