வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (12:23 IST)

எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குகிறாரா ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குகிறார் என கூறப்படுகிறது.
 
ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. தனது கட்சி குறித்த அறிவிப்பை அவர் இம்மாதம் 31 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரை ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என ரஜினி கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனிடையே இப்போது எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குகிறார் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.