மீண்டும் பணியில் சேர்ந்த சசிகலாவின் ஆஸ்தான சமையல் கலைஞர் ராஜம்மாள்!
பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆஸ்தான சமையல் கலைஞரான ராஜம்மாள் மீண்டும் சசிகலாவுக்காக சமைக்க ஆரம்பித்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பலத்த சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு பல வருடங்களாக சமைத்துக் கொடுத்த சமையல் கலைஞரான ராஜம்மாள் இப்போது மீண்டும் சசிகலாவுக்காக சமைக்க ஆரம்பித்துள்ளாராம். சசிகலாவின் தி நகர் இல்லத்தில் அவர் நேற்று முதல் பணிகளை ஆரம்பித்துள்ளார்.