திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (14:42 IST)

இன்னும் ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Rain
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடமேற்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருநெல்வேலி தென்காசி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 7ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran