செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (14:35 IST)

ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் ஜனவரி நான்காம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் நிலையில், வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை உருவாவதால், இன்று முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, ஜனவரி 2-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று அறிவித்த நிலையில், தற்போது அது ஜனவரி 4-ஆம் தேதிக்குப் போகும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran