செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (09:01 IST)

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை!

rahul rajiv
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை!
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மரியாதை செய்துள்ளார். 
 
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இன்று நடை பயணத்தை தொடங்க இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தார். இதனை அடுத்து அவர் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மரியாதை செய்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது