1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (12:19 IST)

பாஜகவுக்கு 150 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்! ராகுல் காந்தி கணிப்பு!

Ragul Gandhi
பாஜகவிற்கு நாடு முழுவதும் 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கணித்துள்ளார். 
 
நாளை மறுநாள் முதல் இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சி தலைவர்கள் செய்து வரும் நிலையில் ராகுல் காந்தி நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது பாஜகவுக்கு நாடு முழுவதும் 150 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாஜகவுக்கு 180  இடங்கள் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது உள்ள நிலைமையை பார்க்கும் போது அந்த கட்சிக்கு 150 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். 
 
நான் பொதுவாக கருத்துக்கணிப்பை நம்புவதில்லை என்றும் ஆனால் தற்போது என் மனதிற்கு இவ்வாறு தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இந்தியா கூட்டணி சிறப்பாக முன்னேறி வருவதாக வருவதாக  அனைத்து மாநிலங்களிலிருந்தும் ரிப்போர்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
 
 
Edited by Mahendran