திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (13:37 IST)

திருமணமாகாத ராகுல்காந்தி பெண்கள் கல்லூரிக்கு சென்றது ஏன்? கம்யூனிஸ்ட் பிரபலம் கேள்வி

திருமணமாகாத ராகுல்காந்தி பெண்கள் கல்லூரிக்கு சென்றது ஏன்?
திருமணமாகாத ராகுல் காந்தி, பெண்கள் கல்லூரிக்கு சென்று கலந்துரையாடல் நடத்தியது ஏன் என்று சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியை மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொச்சியில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு சென்று தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்தார். அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது.
 
இந்த நிலையில் மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகரும் கேரள மின் துறை அமைச்சருமான ஜாய்ஸ் ஜார்ஜ் என்பவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது ’ராகுல் காந்தி ஏன் பெண்கள் படிக்கும் கல்லூரி மட்டுமே சென்று பேசுகிறார்? பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்று கொடுக்கிறேன் என்று கூறி பெண்களை குனிந்தும் வளைந்தும் நிற்கச் சொல்கிறார்.
 
பெண்கள் ராகுல்காந்தி அருகே செல்லக்கூடாது, அவரிடம் பேசும் பெண்கள் பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதற்கு கேரள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
இது குறித்து கருத்து கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன் ’ஜார்ஜ் ஜார்ஜ் கூறியது அவரது சொந்த கருத்து என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து அல்ல என்று கூறினார்.