செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (11:55 IST)

எங்க அம்மாவுக்கு உழைக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்க.. ராதிகா மகள் தேர்தல் பிரச்சாரம்..!

எங்க அம்மா மக்களுக்காக உழைக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று விருதுநகர் வாக்காளர்களிடம் நடிகை ராதிகாவின் மகள் ரியா தேர்தல் பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மேலும் ஏற்கனவே இந்த தொகுதிக்கு எம்பியாக இருக்கும் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இங்கு மும்முனைப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் சற்றுமுன் பாஜகவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் ரியா ராதிகா ஓட்டு கேட்ட வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் ’அம்மாவுக்கு விருதுநகர் தொகுதியில் வாக்களியுங்கள் என்றும் அவரை அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

உங்களுடன் இருந்து உங்களுக்கு தேவையானதை அம்மா நிறைவேற்றுவார் என்றும் உங்களுக்கு உழைக்க ஒரு சந்தர்ப்பத்தை அம்மாவுக்கு கொடுங்கள் என்றும் எனவே அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் பேசியுள்ளார்

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 
Edited by Mahendran