திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 1 டிசம்பர் 2021 (20:23 IST)

அதிமுகவின் விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது - புகழேந்தி

அதிமுகவின் விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக , பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், அதிமுக குறைந்த இடங்களை பெற்று தோற்றது. இத்தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என அன்வர் ராஜா  கூறியதாகத்  தெரிகிறது.

இந்நிலையில் அதிமுகவின் கொள்கைக்கு முரணாகவும், தலைமையின் கோட்பாட்டுக்கு விரோதமாக செயல்பட்டதாக அன்வர் ராஜாவை அக்கட்சியில் இருந்தும் , அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்  நீக்கி நேற்றிரவு  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்  மற்றும்  துணை ஒருங்கிணைப்பாளர் ஐபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக  அறிக்கை வெளியிட்டனர். இது அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று அதிமுகவின் விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் எடுக்கின்ற முடிவுகள் மட்டுமே அதிமுகவில் செயல்படுத்தப்படுகிறது.  அதனால், அதிமுகவின் விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.