செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:26 IST)

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி… 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

Puducherry
தமிழ் புத்தாண்டை தொடர்ந்து வரும் சனிக்கிழமையையும் சேர்த்து புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 14ம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15ம் தேதி கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த இரு நாட்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமையை தொடர்ந்து ஞாயிற்று கிழமை வார விடுமுறை.

எனவே இடையே உள்ள சனிக்கிழமை ஏப்ரல் 16ம் தேதியை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.