சூர்யாவின் நீட் கருத்தில் உள்நோக்கமில்லை: ஆதரவு அளித்த முதலமைச்சர்!
நீட் தேர்வு குறித்து சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்த அறிக்கை குறித்து கருத்துச் சொல்லாத திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த அறிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பதும், பாஜக உள்பட ஒரு சில கட்சிகளின் அரசியல்வாதிகள் மட்டுமே சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி ஆதரவளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீட் தேர்வு தொடர்பான சூர்யாவின் கருத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் மக்களின் பிரதிபலிப்பை நடிகர் சூர்யா பேசி உள்ளார் என்றும் அவர் எதார்த்தமாக கூறியதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
தமிழகத்தின் அண்டை மாநில முதல்வர் ஒருவரே சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது