வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:31 IST)

மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000 நிவாரணம்!

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் கனமழை பெய்த நிலையில் புதுவையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000 நிவாரண உதவி வழங்கப்படும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது 
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புதுவையில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன என்பதும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அதேபோல் பாதிப்படைந்த விளைநிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் மேலும் மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மீனவர்கள் ஆகியோர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 5000 வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக புதுவை மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது