ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு: புதுவை ஆளுநர் தமிழிசை
ஆர்எஸ்எஸ் பேரணி சென்றால் என்ன தவறு என புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல தமிழக அரசு அனுமதி கொடுத்த நிலையில் அந்த அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்தி ஜெயந்தி பேரணி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார்
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அமைதி பேரணி தான் நடத்தவுள்ளனர் என்றும் அதை ஏன் தடை செய்ய வேண்டும் என்றும் அது மட்டுமன்றி தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் தவறு எதுவும் கிடையாது என்றும் காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு மற்றவர்களைப் போல உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது