ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (15:03 IST)

ஆர்பாட்டத்தின் போது சூர்யா உருவ பொம்மை எரிப்பு: எல்லை மீறும் இந்து முன்னணி!

நடிகர் சூர்யாவின் புகைப்படம் பொருத்திய உருவபொம்மையை தீ வைத்து கோசங்களை எழுப்பு ஆர்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இது பெரும் பேசு பொருளானது என்றாலும் நீட் தேர்வு மத்திய அரஉ வழிகாட்டலில் சிறப்பாக நடந்து முடிந்தது.
 
இந்த நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சியினர் கடும் விமர்சனம் தெரிவித்தனர். இந்து முன்னணி அமைப்பினட் சூர்யாவை அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என அறிவிப்பை வெளியிட்டனர். 
 
இந்நிலையில், மதுரை முனிச்சாலை சந்திப்பில் இந்து முன்னணி அமைப்பின் ஒரு பிரிவான இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும் குரல் கொடுத்து வரும் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே திடீரென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர்  மறைவாக நின்று நடிகர் சூர்யாவின் புகைப்படம் பொருத்திய உருவபொம்மையை தீ வைத்து கோசங்களை முழங்க ஆரம்பித்தனர். 
 
இதை பார்த்த காவல்துறையினர் உருவ பொம்மையில் இருந்து வரும் தீயை அணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.