புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (16:18 IST)

SBI ஏடிம் களில்-ல் பணம் எடுக்கத் தடை

சென்னை ராமாவரத்தில் எஸ்.பி.சி வங்கி ஏ.டி,எம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த வங்கி மேலாளர் காவல்துறையில் புகார் தெரிவித்தார். இதையெடுத்து  இந்தக் காட்சிகளை வெளியிட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.ஐ மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெபாசிட் வசதியுள்ள ஏ.டி.எம்களில் பணம் எடுக்கத் தற்காலிகமாகத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையிலுள்ள தரமணி, வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏடிஎம்களில் சென்சாரை மறைத்து வடமாநில கொள்ளை கும்பல் திருடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும் போலீஸர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.