கள்ளக்காதலிகளுடன் உல்லாசம்: கொல்லப்பட்ட மாநில இளைஞர் அணி செயலாளர்
ஈரோட்டில் பல பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் ஒரு முன்னணி கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தனியாக இருக்கும் சிவகுமார் பல பெண்களுடன் தகாத உறவியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களிடம் அவ்வப்போது பணமும் பறித்து வந்துள்ளார். சிவகுமாரின் கள்ளக்காதலிகளில் ஒருவர், அவரை கொடூரமாக கொலை செய்து தப்பித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.