திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:22 IST)

5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். 

 
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். 
 
இதற்காக போலீசார் நேற்று காலை முதலே தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் 5 அடுக்கு பாதுகாப்பு சென்னை சட்டசபை வளாகத்தில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிவிரைவு படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என சுமார் 3,000 மேற்பட்டோர் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.