ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:33 IST)

கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, 25 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கப்பட்டது

கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம்,மற்றும் தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா சங்கம் ஆகியோர் இணைந்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை வழங்கும் விதமாக முதல் கட்டமாக செல்வபுரம் காவல் நிலைய எல்லை பகுதிக்கு  25 கண்காணிப்பு கேமராக்களை வழங்கினர்.
 
இதில் ,கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா,மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி,சசிக்குமார் பாண்டியன் உட்பட தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரகுநாதன் சுப்பையா...
 
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வழி வகுத்து கொடுத்து மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு காணப்படுவது என சறப்பாக செயல்பட்டு வரும் கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு,  கோவையில் வாழும் சுமார் 1 ½ லட்சம் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்த  சமூகத்தின் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், மேலும் தங்க நகை தயாரிப்பு கூடங்கள் (பட்டறைகள்) அதிகமாக உள்ள பகுதியான, செல்வபுரம், ஆர்.எஸ்..புரம், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட  காவல் நிலைய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளை சற்று அதிகப்படுத்தி தங்க நகை தயாரிப்பாளர்களான பொற்கொல்லர்களுக்கும், தங்க நகை மொத்த வியாபாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தர காவல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்…