வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (12:03 IST)

கூட்டணி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.. அதிமுககிட்ட கேளுங்க! – பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை என தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக, பாமக உள்ளிட்டவற்றுடன் கூட்டணிக்கு பேசி வரும் அதிமுக, தேமுதிகவை கண்டுகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெடுகாலம் கழித்து இன்று பிரச்சாரம் கிளம்பியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் “இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் ஈடுபடுவார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தேமுதிக தயாராக உள்ளது. இனி கூட்டணி பற்றி எங்களிடம் கேட்பதில் பயனில்லை. அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.