வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (07:47 IST)

கனமழை எதிரொலி: நெல்லையில் கர்ப்பிணிகள் 7 நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் சேர்ப்பு!

Pregnant
நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில்  நெல்லை உள்பட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த ஏழு நாட்களில் மகப்பேறுக்கு தகுதி உள்ள கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 
 
இதுவரை 24 பெண்கள் மகப்பேறுக்கு தகுதி உள்ளவர்கள் என்று கண்டெடுக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு வாரத்தில் பிரசவம் ஆகும் நிலையில் உள்ள பெண்கள் தகவல் அளித்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நெல்லை போலவே மற்ற கன மழை பெய்யும் மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva