செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:57 IST)

ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி: 3 உயிர்கள் பரிதாப பலி!

Pregnant
கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்ற நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் அவரிடம் ஆதார் அட்டை இல்லாததால் திருப்பி அனுப்பி விட்டதாகவும் இதனால் அந்த பெண் மற்றும் அவரது இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்குரு என்ற மாவட்டத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் ‘தாய்’ அடை இல்லாததால் அவரை திருப்பி அனுப்பிவிட்டனர் 
 
இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கு அவரிடம் பணம் இல்லாததால் வீட்டுக்கு திரும்பி வந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது இதில் கஸ்தூரி மற்றும் அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிகிறது 
 
கர்நாடக மாநிலத்தில் இரட்டை குழந்தைகளுடன் பலியான கஸ்தூரி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran