பிரசாந்த் கிஷோர் தான் ஆலோசகர்: ஒப்புக்கொண்ட ஸ்டாலின்
வரும் தேர்தலில் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 50ஆண்டுகளுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் ஒரு கட்சிக்கு ஆலோசனை செய்ய ஒருவர் தேவை என்றால் ஆளுமையுள்ள தலைவர், முடிவெடுக்கும் தலைவர் அந்த கட்சியில் இல்லையா/ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினி பெயரை டேமேஜ் செய்வதற்காக பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் களமிறங்கியுள்ளது என ரஜினி ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திமுக தலைவரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது