தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாவது:
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிசம்பர் 7,8) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் வரும் 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.