வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:37 IST)

வங்கிககளுக்கு மட்டும்தான் அரைநாள் வேலையா? – தபால்துறை திடீர் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வங்கிகளை தொடர்ந்து தபால் நிலையங்களும் அரை நாள் வேலை நேரத்தை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக இனி அனைத்து வங்கிகளும் நாளில் பாதி வேலை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அஞ்சல் அலுவலகங்களும் இனி மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்கள் பலவும் பாதி நாள் மட்டுமே இயங்குவது என அறிவிக்க வாய்ப்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.