7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!
ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லாரன்ஸ் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது
மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்
இதனை அடுத்து அவரை அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது