வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (21:05 IST)

ஆபாச படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு: என்ன காரணம்?

சிறார் ஆபாசப்படம் பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சமீபத்தில் எச்சரித்தது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆபாச படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்
 
இந்த செய்தி தமிழகம் முழுவதும் பரவியதை அடுத்து ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஆபாச படம் பார்க்க கூடாது என்று அறிவுரை கூறினால் யாரும் கேட்க மாட்டார்கள், ஆனால் கைது நடவடிக்கை என்று கூறினால் நிச்சயம் ஆபாசம் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று போலீசார் கணித்தனர்
 
போலீஸார் கணித்தபடியே ஆபாசம் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி ஆபாச படம் பார்த்ததால் கைது என்றும் வீட்டில் உள்ளவர்கள் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்கள் என்றும் பலரும் நினைப்பதால் மனதுக்குள் ஆசை இருந்தாலும் பலர் ஆபாச படங்களை பார்க்க தவிர்த்து வருவதாக தெரிகிறது. இதே நிலை நீடித்தால் பாலியல் குற்றங்களும் குறையும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்