வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (12:31 IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு: நாளை தொடங்குகிறது!

Train
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் பயணம் செய்பவர்கள் பயணம் செய்யும் நிலையில்  செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
IRCTCயின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் பொங்கல் பண்டிகைக்கு பயணம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு ஒரு சில மணி நேரங்களில் விற்று தீர்ந்து விடும் என்பதால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
Edited by Mahendran