1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:26 IST)

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பற்றிய அறிவிப்பு எப்போது? அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் செல்லும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அந்த சிறப்பு பேருந்துகள் பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 14, 15 ஆகிய தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்


இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிப்பு ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி பொங்கல் சிறப்பாக 100 புதிய பேருந்துகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  துவக்கி வைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜனவரி 8ஆம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு வெளியானவுடன் பொதுமக்கள் தாங்கள் செல்லும் ஊருக்கு சிறப்பு பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva