திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:56 IST)

அம்மா உணவகத்தில் பொங்கல் சூப்பர் டேஸ்ட்: சொல்வது யார் தெரியுமா?

அம்மா உணவகத்தில் பொங்கல் மிகவும் ருசியாக இருந்தது என்று கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


 

கர்நாடகாவில் மின்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் டி.கே.சிவகுமார். ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்காக பெங்களூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த அவர் போருரிலுள்ள அம்மா உணவகம் ஒன்றில் ரூ.5 க்கு பொங்கல் வாங்கி சாப்பிட்டார். பின்னர் இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அம்மா உணவகத்தில் சாப்பிட்ட பொங்கல், சுவையானதாகவும், போதிய அளவுக்கு இருந்தது என்று கூறியுள்ளார்.