பாகிஸ்தான் ஆதரவாளரா மு.க.ஸ்டாலின்? – பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

mk stalin
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (09:46 IST)
கர்நாடகாவில் இளம்பெண் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதற்கு காரணமே மு.க.ஸ்டாலின்தான் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஏஏ-வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அமுல்யா என்ற பெண் மேடையில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என கத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அப்பெண்ணுக்கு நக்சல்களுடன் தொடர்பு இருப்பதாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறினார்.

இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் எம்.பி பொன்.ராதாகிருஷ்ணன், அமுல்யா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும், அவரது வழிகாட்டலின் பெயரிலேயே இது நடந்ததாகவும் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்கள் வழியாக கண்டனங்கள் தெரிவித்து வரும் திமுகவினர் ‘அண்டை மாநிலங்களில் நடைபெறும் இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் திமுக எப்படி பொறுப்பாக முடியும் என கேள்வியெழுப்பி உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :