வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (09:48 IST)

அது எப்படி எடப்பாடியார் முதல்வர் வேட்பாளராக முடியும்? பொன்னார் சுளீர் கேள்வி!

அதிமுக, பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி. 
 
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு முடிவு நேற்று தெரிந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். 
 
இதனையடுத்து அவர் முதல்வர் வேட்பாளராக விட்டுக் கொடுத்து விட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அறிவிக்கப்பட்ட உடன் 11 வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அதிமுக, பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என தற்போது சொல்ல தேவையில்லை. தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பளர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். 
 
இருப்பினும், அதிமுகவில் நிலவிய குழப்பத்தில் குளிர்காய காத்திருந்த கட்சிகளுக்கு முடிவு கட்டக்கூடிய வகையில் அறிவிப்பு வெளியானதில் மகிழ்ச்சி என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.