1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (10:14 IST)

எண்ணெய் கழிவு தேங்கியதற்கு யார் காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

எண்ணெய் கழிவு தேங்கியதற்கு யார் காரணம் என்பது குறித்த அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
 
இதன்படி சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என்றும், சிபிசிஎல் வளாகத்தில் போதுமான மழை நீர் வடிகால் மேலாண்மை இல்லாததை வல்லுநர் குழு கண்டறிந்ததாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியதோடு, எண்ணெய் கழிவு தாக்கம் ஏற்பட்ட பகுதிக்கான விரிவான செயல் திட்ட அறிக்கையை தயார் செய்து அனுப்ப சிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்  சென்னை எண்ணூர் பகுதியில் மழை நீரோடு  எண்ணெய் கழிவுகளும் சேர்ந்ததால் அந்த பகுதியே  பெரும் சுகாதாரக் கேடாக இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து தமிழ்நாடு வாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran