ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (18:06 IST)

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 5 பேருக்கு காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மணிவண்ணன் என்பவர் போலீஸாரிடம் சரணடைந்தார்.
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப் பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன.
 
இதனையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான  5பேரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
இந்நிலையில் இன்று கணொளி காட்சி மூலம் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. இதனையடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்னன் ஆகியோரின் நீதிமன்ற காவலலை வரும் மே 6 ஆம் தேதிவரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் வாதாட மாட்டோம் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.