ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2019 (09:56 IST)

அரசியல் ஆக்கப்படுகிறதா பொள்ளாச்சி கொடூரங்கள்?

பொள்ளாச்சியில் மனித மிருகங்கள் பெண்களை பாலியல் வண்புணர்வு செய்தது அரசியல் ஆக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட அயோக்கியன் திருநாவுக்கரசு என்பவன் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டான்.
 
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
 
இதற்கிடையே அதிமுகவை சார்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், இந்த விவகாரத்தை வெளிகொண்டு வந்ததே நாங்கள் தான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக திமுக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்தார்.
 
இப்படி இந்த விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
இதை அரசியல் ஆக்காமல் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி பெண்களை வேட்டையாடிய இந்த வெறிநாய்களுக்கு உடனடியாக உச்சகட்ட தண்டனையை கொடுக்க வேண்டும், என்பதே பெரு வாரியான மக்களின் ஆதங்கமாக உள்ளது.