1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (12:02 IST)

மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா: பல கட்சிகள் ஆதரவு!

நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்ததற்கு பல கட்சிகள் ஆதரவு. 

 
நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நிலையில் அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அவர் திருப்பி அனுப்பிய நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்ததற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க, மமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு மசோதா விவாதம் நடந்த போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.