வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (18:12 IST)

கரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம்

கரூர் மாவட்டத்தில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.


 

இதில் கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, திருச்சி சிட்டிக்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா கரூர் நகருக்கு மாற்றப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, ராமநாதபுரம் பரமக்குடிக்கும், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கீதாஞ்சலி கரூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் அரவக்குறிச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.